வாகன நிறுத்தத்தால் நோய் தொற்று பரவும் அபாயம்
விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனங்கள், வழக்கு விசாரணையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம்;
Update: 2024-02-22 06:16 GMT
உருக்குலைந்த வாகனங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரிக்கரை புறவழிச் சாலையில், கழிவுநீர் கால்வாய் உள்ள பகுதியில், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனங்கள், வழக்கு விசாரணையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி, சாலையில் செல்வோர் சிறுநீர் கழிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சாலை ஓரம் நிறுத்தப்பட்டுள்ள, விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.