திருப்பாச்சேத்தி அருகே ஆற்றுப் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பாச்சேத்தி அருகே ஆற்றுப்பாலம் சேதமடைந்த நிலையில் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2024-07-01 15:16 GMT
ஆற்றுப்பாலம் சேதம்

திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்பாலத்தில் கான்கிரீட் சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் ஆபத்தான முறையில் வெளியே நீட்டி கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்பாச்சேத்தி, ஆவரங்காடு, பிச்சைப்பிள்ளையேந்தல், மாரநாடு உள்ளிட்ட கிராம மக்கள் திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்பாலத்தை கடந்து தான் சிவகங்கை சென்று வர வேண்டும்.1991ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட இந்தப்பாலம் போதிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து வருகிறது. பாலத்தின் பல இடங்களில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன.

பாலத்தை இணைக்கும் இடத்தில் பாலம் சேதமடைந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே விபத்தை ஏற்படுத்தும் வகையில் நீட்டி கொண்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே பாலத்தை ஆக்கிரமித்து,

குடிநீர் குழாயை பொருத்தி இருப்பதால் சிரமத்திற்குள்ளாகி இருந்த நிலையில் பராமரிப்பு இன்றி மேலும் வாகன ஓட்டிகளை பாலத்தின் கம்பிகளும் வாகனங்களை பலத்த சேதப்படுத்தி ஏற்படுத்தி வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News