சாத்தூரில் சாலை விபத்து: சிறை வார்டன் காயம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நெடுஞ்சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்தில் மதுரை மத்திய சிறை சாலையில் பணிபுரியும் ஜெயில் வார்டன் காயம் அடைந்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-30 15:29 GMT
விருதுநகர் முத்துராமலிங்கம் நகர் பகுதியில் வசித்து வருபவர் முனீஸ்வரன். இவர் மதுரை மத்திய சிறைச்சாலையில் ஜெயில் வாடனாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
கணபதி நகரைச் சார்ந்த கருப்பசாமி என்பவர் ஓட்டு வந்த இருசக்கர வாகனம் முனீஸ்வரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது .
இதில் முனீஸ்வரன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முனிஸ்வரன் அளித்த புகார் அடிப்படையில் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.