குமாரலிங்கபுரம் அருகே சாலை விபத்து: 3பேர் காயம்

விருதுநகர் சிவகாசி சாலையில் பி குமாரலிங்கபுரம் அருகே நடந்து சென்ற நபர் மீது பைக் மோதிய விபத்தில் மூவர் காயம் அடைந்தனர்.

Update: 2024-02-15 13:28 GMT
காவல் நிலையம் 

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தைச் சார்ந்தவர் ஜெயக்குமார் வயது 37 இவர் டாட்டா ஏசி இன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 7ஆம் தேதி இரவு நான்கு சக்கர வாகனத்தில் பர்னிச்சர்களை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து திருத்தங்கள் செல்வதற்காக தன்னுடன் பணிபுரியும் ஹரிஹரன் என்பவரை உடன் அழைத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இவர்கள் சென்ற வாகனம் விருதுநகர் மாவட்டம் பி குமாரலிங்கபுரம் பகுதியில் டயர் வெடித்து பழுதான காரணத்தினால் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அதை பழுது பார்ப்பதற்காகவும், சாப்பிடுவதற்காகவும் ஹரிஹரன் மற்றும் ஜெயக்குமார் சாலையின் ஓரத்தில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது விருதுநகர் மாவட்டம் திருத்தங்கள் பகுதியைச் சார்ந்த பெரியசாமி என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்பொழுது பெரியசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக ஓட்டி வந்து ஜெயக்குமார் மீது மோதி 3 ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் ஜெயக்குமார் பெரியசாமி, பெரியசாமியின் மனைவி அழகம்மாள் ஆகிய மூவரும் காயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆமத்தூர் காவல் நிலையத்தில் காயமடைந்த ஜெயக்குமார் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News