அங்கன்வாடி மையத்தை சீர்செய்ய கோரிக்கை
முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி சேர்மன் ஏ.ஷாஜஹான் தலைமையில் செயல் அலுவலர் செ.மாலதி துணை சேர்மன் ராவயணப்பெருமாளி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களிடையே விவாதம் வருமாறு. பார்வதி (அதிமுகி காந்திநகர் மற்றும் அம்பேத்கர் நகரில் பால்வாடி உடைந்து திடக்கிறது மழையால் கட்டிடம் முழுவதும் ஒழுகிறது இதனை மராமத்து செய்ய வேண்டும்.ஷாஜஹான் (சேர்மன் அங்கன்வாடி கட்டிடம் நலத்துறையின் கட்டும் பாட்டில் உள்ளன.
நாம் மராமத்து செய்ய முடியாது மோகன்தாஸ் (திமுக) ஊராட்சி ஒன்றிய ஆனையாளர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை உதவு இயக்குநரிடம். கேட்டபோது பேரூராட்சி நிர்வாகம்தான் மராமத்து செய்ய வேண்டும் என கூறினார்கள் ஷாஜஹான் (சேர்மன்) அதிகாரிகளிடம் கேட்டு முடிவு செய்வோம்.
உம்மு தர்தா (திமுக)13வது வார்தல் காவிரி குடிநீர் சப்ளை வராததால் கடும் குடிநீர் பற்றாக்குறை உள்ளன. பார்வதி அதிமுக) காந்திநகரில் கடும் குடிநீர் பந்தாக்குறை உள்ளது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு விவாதம் நடைபெற்றது