மாணவர்களின் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.

மாணவர்களின் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.

Update: 2023-12-07 11:56 GMT

மாணவர்களின் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை.ஆலாந்துறை அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அப்பள்ளியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கைது செய்யபட்டார். இந்நிலையில் உயர்கல்வி ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மூன்று சாலைகளை மறித்து போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீண்ட பேச்சுவார்த்தை பின்னர் போலீசார் உத்தரவாதம் அளித்ததின் அடிப்படையில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.பள்ளி ஆசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News