மருதூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
ஆண்டிமடம் அருகே குடிநீர் வராததை கண்டித்து கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். என்னிடையில் அங்குள்ள மேல்நிலை நீர் காக்க தொட்டியில் மோட்டார் பழுத காரணமாக கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் வழங்க வில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து, மருதூர் சாலையில் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார்,
ஊராட்சித் தலைவர் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது எடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் நடத்திய இப் போராட்டம் காரணமாக ஜெயங்கொண்டம் -செந்துறை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.