ரூ.79.39 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி - துவக்கி வைத்த எம்.எல்.ஏ
Update: 2023-11-08 11:13 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, அலிவலம் ஊராட்சி தேவர் குடியிருப்பு பகுதியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் சிறப்பு கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பரிந்துரையை ஏற்று, சுமார் 1,500 மீட்டர் சாலை, ரூ.46.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இதேபோல், பூவாளூர் ஊராட்சி நெய்வவிடுதி சாலை, ரூ.33.29 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. இரண்டு சாலைப்பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் இன்று தொடங்கி வைத்தார். இதில், தலைமை பொதுக் குழு உறுப்பினர் அப்துல் மஜீத், திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், பேராவூரணி நகரச் செயலாளர் சேகர், மாவட்டக் கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆசைத்தம்பி (அலிவலம்), முருகேசன் (பூவாளூர்), ஒன்றியக் குழு உறுப்பினர் நவநீதம் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி ஒன்றியப் பொறியாளர் சிவக்குமார், திமுக மூத்த முன்னோடி சிதம்பரம் உள்ளிட்ட கிராமப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.