சாலை அமைக்கும் பணி - யூனியன் சேர்மன் ஆய்வு

ஆலங்குளம் அருகே கல்லூரணியில் நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணியை கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-04 05:19 GMT
ஆய்வு 
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சி, பாவூர்சத்திரம் ஆதித்தனார் சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியினை கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை நேரில் சென்று சாலை அமைக்கும் பணி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News