வாலாஜாபாத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

வாலாஜாபாத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-01-25 16:19 GMT

விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

தமிழகத்தில் 35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ஒரகடம் டான்போஸ் தொழிற்சாலை மற்றும் சென்னை அண்ணா நகர் பி.ஆர்.ஆர் டிராவல்ஸ் சார்பில் டான்போஸ் மேலாளர்கள் வசந்தகுமார், டேவிட்லூதூர் சாமி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில், வாலாஜாபாத் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்து பேரணியை துவக்கி வைத்தார். பின்னர், தொழிற்சாலை ஊழியர்கள் கையில் சாலை பாதுகாப்பு பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

இந்த பேரணி பேருந்து நிலையம் அருகே இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. மேலும், தலைகவசம் அணியாமலும், செல்போன் பேசியபடியும் வாகனத்தை ஓட்ட மாட்டேன். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி கொடுப்பேன்,

மது அருந்திய பிறகு வாகனம் ஓட்ட மாட்டேன். ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ மாட்டேன் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் பேரணியில் எடுக்கப்பட்டது. இதில், பி.ஆர்.ஆர் டிராவல்ஸ் நிர்வாகிகள், சங்கரநாராயணன், ஜெயச்சந்திரன், பாண்டு, பிரதாப் ராஜன் மற்றும் டான்போஸ் தொழிற்சாலை ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags:    

Similar News