சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பான மாதிரி வடிவமைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.

Update: 2024-01-22 08:00 GMT

காட்சிப்படுத்தல் 

சென்னை போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து வார்டன் அமைப்பு இணைந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பான மாதிரி வடிவமைப்புகளை காட்சிப்படுத்தினார்கள். இதில் 3 சிறந்த மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இதனை தயாரித்த மாணவ- மாணவிகளுக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பதக்கங்கள் மற்றும் வெகுமதி வழங்கினார். வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலுவுக்கு 2023-ம் ஆண்டின் சிறந்த விழிப்புணர்வு விருதை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கி பாராட்டினார்.
Tags:    

Similar News