சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம் மாநகர காவல்துறை சார்பில் கோரிமேடு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
Update: 2024-01-25 03:43 GMT
சேலம் மாநகர போலீசார் சார்பில் கோரிமேட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சாலை விதிகளை பின்பற்றுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, தலைக்கவசம் அணிவது குறித்தும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடமும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.