சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-02-07 07:51 GMT
விழிப்புணர்வு நிகழ்ச்சி 

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில்(தன்னாட்சி) மாணவர் சேவை பிரிவு மையம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தோரைத் தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் முனைவர் என்.அழகுமணிக்குமரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் அ. சாரதி தலைமை தாங்கினார். கல்லூரிச் செயலாளர் எம்.டி சர்ப்பராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சாலை பாதுகாப்புத் துறைச் சங்கத்தின் உறுப்பினர் டி.முருகேசன் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பின் அவசியத்தினைக் குறித்து கருத்துரை வழங்கினார். மதுரை முதல் கன்னியாகுமரி டோல்வே லிமிடேட்டின் சாலை பாதுகாப்பு மேலாளர் வி. பாண்டியன் அவர்கள் கலந்துகொண்டு சாலைகளில் உள்ள குறியீடுகளின் அவசியத்தினையும் சாலை விதிகள் பற்றியும் ஓர் ஆண்டில் நடைபெறும் வாகன விபத்துக்களினைப் பற்றியும் விளக்கி கூறினார். பின்னர் சாலை விதிகளைக் கடைபிடிப்போம் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக நாட்டுத் தொண்டுத் திட்ட அதிகாரி செ.வே.செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் சேவைப் பிரிவு டீன் முனைவர் என். நிர்மல்குமார்,கூடுதல் டீன் முனைவர் ஜெ.பாண்டியராஜன் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அணிகள் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News