சாலை விதிமீறல் - 767 வழக்குகள் பதிவு

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் மோட்டார் வாகன விதிகளை மீறி இயங்கிய வாகனங்கள் மீது 767 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-06-14 04:01 GMT
பைல் படம் 

மே மாதத்தில் வாகனத்திற்கு தேவையான வரிகள் செலுத்தாத வண்டிகளுக்கு ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 077 வசூலிக்கப்பட்டதாகவும், இதே போல் விதிமீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 14,95,435 அந்த இடத்திலேயே வசூலிக்கப்பட்டது. மேலும் வெளியூர் வாகனங்களுக்கு ரூ.28,71,300 ரூபாய் அபராத தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.மொத்தத்தில் மே மாதத்தில் மட்டும் ரூ.48,64,807 அபராதம் விதிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மே மாதத்தில் அதிக எடை ஏற்றிய சரக்கு வாகனங்களுக்கு 61 தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.20,17,000 அபராதமாக நிர்ணயிக்கப்பட்டு ரூ.1,93,000 வசூலிக்கப்பட்டது. இதே போல் அதிவேகமாக இயங்கி வாகனங்கள் 31, அதிக ஆட்கள் ஏற்றியது 72, புகை சான்று இல்லாதது 54, சீட் பெல்ட் அணியாதது 65, குடிபோதையில் வாகனம் இயக்கியது 2 , ஹெல்மெட் அணியாதது 41, அலைபேசி பேசி கொண்டே இயக்கியது 13 என மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகள் மீறிய வாகனங்களுக்கு 767 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Tags:    

Similar News