கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம்
திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது. கோட்ட தலைவர் பி.மதிவாணன் தலைமை தாங்கினார். பி.விஜயன் ஜெ.அம்பேத்கர்தாசன் எம்.தேவேந்திரன் கோட்ட இணை செயலாளர் ஏழுமலை மாநில செயற்குழு ஆர்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்க கோட்டத் துணை தலைவர் ஜி.முருகன் அனைவரையும் வரவேற்றார். சிஐடியு மாவட்ட- செயலாளர் இரா.பாரி துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் - ஏ.ஏழுமலை கோரிக்கைகளை விளக்கி பேசி பேசினார். டிஎன்பி எச்என்ஏ மாநில செயலாளர் டி.பி.புனிதா டிஎன்ஆர்ஓஏ மாவட்ட செயலாளர் பி.ரகுபதி - டி.ஏஎம்எஸ்ஏ மாவட்ட தலைவர் எம்.மணி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஓட்டுநர்சங்க மாவட்ட தலைவர் மு.மாரியப்பன் டிஎன்ஜிஇஏ மாநில செயற்குழு மா.பரிதிமால்கலைஞன் டிஎன்எஸ்இஏ மாவட்டதலைவர் ப.பிரபு ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வாழ்த்துரை வழங்கினார்.நிறைவாக மாநில செயலாளர் ம.மகாதேவன் சிறப்புரையாற்றினார்.
நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேசுரன் தொழிற்சங்க விரோத போக்கினை கண்டித்தும் சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் சாலை பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும் சாலைப்பணியாளர் பணிக்கு மட்டுமே தகுதியானவர்களுக்கு சாலை பணியாளராக பணிநியமனம் கோட்ட பொறியாளர்கள் வழங்கிட அனுமதிக்க வேண்டும் சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5200- 20200 தர ஊதியம் 1900 வழங்க வேண்டும் தொழிற்சங்க உரிமையினை கேலிக்குள்ளாக்கும் ஜனநாயக ரீதியான தொழிற்சங்க இயக்கங்களை அச்சுறுத்திஅத்துமீறும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுவரும் தலைமை பொறியாளர் இரா. சந்திரசேகரனை கண்டித்தும் இந்த கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் எஸ்.சீனுவாசன் நன்றி கூறினார்.