பணிநீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றகோரி சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-12-08 02:50 GMT
சாலைப்பணியாளர் ஆர்ப்பாட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவர் டி.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் கோட்டச் செயலாளர் பி.சந்திரசேகரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், "சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் இறந்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.  சாலைப் பணியாளர் பணிக்கு மட்டுமே தகுதியானவர்களுக்கு சாலைப்பணியாளராக பணி நியமனம் கோட்டப் பொறியாளர்கள் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் ஏற்பட்டுள்ள தொழிற்சங்க விரோதப் போக்கை உயர் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி, மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News