சாலையோரம் குப்பை; வாகன ஓட்டிகள் அவதி
குன்றத்துார் நகராட்சியில் வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கொட்டப்படும் குப்பைக்கழிவு சரிவர அகற்றப்படாததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.;
Update: 2023-12-27 12:25 GMT
குன்றத்துார் நகராட்சியில் வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கொட்டப்படும் குப்பைக்கழிவு சரிவர அகற்றப்படாததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரமாகும் குப்பை கழிவுகளை சேகரித்து, வளம் மீட்பு பூங்காவில் தரம் பிரித்து அகற்ற வேண்டும். ஆனால், முறையாக குப்பை அகற்றப்படுவதில்லை. வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துாரில் உள்ள குப்பை கிடங்கு வெளியே சாலையோரம் பல இடங்களில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவற்றில் உணவு தேடி வரும் நாய் மற்றும் மாடுகளால், வெளிவட்ட சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். குன்றத்துார் நகராட்சி நிர்வாகத்தினர் வெளிவட்ட சாலையோரம் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்."