ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை - மூவர் கைது.

குன்னூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை சிசிடிவி காட்சிகள் உதவியோடு போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-13 05:23 GMT

பைல் படம் 

நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலக்கம்பை மேலூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 62. இவர் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கூடலூரில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருவதால், ராதாகிருஷ்ணன் மனைவியுடன் கூடலூரில் தங்கி இருந்தார். இதனால் குன்னூரில் உள்ள வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் இவருடைய வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர்.

Advertisement

ஆனால் பணம் நகை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து டி.வி., சிலிண்டர், அடுப்பு, மெத்தை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், கொலக்கம்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதில் மேலூரை சேர்ந்த சூர்யா 20, ராஜ்குமார் 35, மணிபாரதி 24 ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News