ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளை

ராணிப்பேட்டை அருகே ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது.

Update: 2023-12-15 13:43 GMT

 ராணிப்பேட்டை அருகே ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காவேரிப்பாக்கம் அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் 41 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் கொள்ளை போலீசார் விசாரணை.. ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம்புதூரில் உள்ள காமராஜர் நகரில் வசித்து வருபவர் ராமலிங்கம் (60) இவர் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஆவர். இவருக்கு சரளா என்ற மனைவியும் பார்த்திபன் சதீஷ் என்கிற இரண்டு மகன்களும் சுதா என்கிற மகளும் உள்ளனர்.

இவர்கள் மூவருக்கும் திருமணம் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவியும் வழக்கம் போல் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய வேலைக்காக காலை சென்றுள்ளனர். அதன்பின் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் பொழுது வீட்டின் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சடைந்து உள்ளே சென்றுள்ளனர். உள்ளே சென்று பார்த்த பொழுது பூட்டிய கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

வீட்டின் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறி காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீரோவில் லாக்கரில் வைத்து இருந்த நகைகள் பணங்கள் திருடு போனது தெரியவந்தது பீரோவின் லாக்கரில் 41 சவரன் நகை 10 லட்சம் ரூபாய் ரொக்க பணம் திருடு போனதாக காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்ப இடத்தில் கைரேகை நிபுணர்கள் வர வைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கப்பட்டது. பட்டப் பகலில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 41 சவரன் நகையும் 10 லட்சம் ரூபாய் ரொக்க பணம் திருடு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News