பூட்டிய வீட்டில் கொள்ளை முயற்சி!
திருவண்ணாமலையில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-28 14:44 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையம் அஜீஸ் நகர் பகுதியில் பூட்டி இருந்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து இரண்டு மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் வாகனத்தின் சைரன் சத்தம் கேட்டதும் பூட்டை கீழே போட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர். திருட்டு சம்பவத்தை தடுக்க காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.