திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை - மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2024-02-17 06:50 GMT

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் சேகர் என்பவரின் மகன் செந்தில்( 34 ) இவர்களுக்கு ஒரு பெண்,2 ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு அட்சாநகர் பகுதியில் புதியதாக கட்டிய வீட்டை வாங்கி உள்ளார். புதியதாக வாங்கிய வீட்டில் 10 நாள் மட்டுமே தங்கி வசித்து உள்ளனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் பயமாய் இருப்பதாக அவருடைய பிள்ளைகள் கூறியதால் மீண்டும் ஏற்கனவே வசித்து வந்த அண்ணா நகர் பகுதியில் உள்ள பழைய வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அட்சயா நகர் பகுதியில் புதிதாக வாங்கப்பட்ட வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று இரவு வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டில் வைக்கப்பட்டிருந்த 8 கிலோ பித்தளை பொருட்கள்மற்றும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 1/2 கிலோ மதிப்புள்ள 2 குத்துவிளக்குகள் 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதை அறிந்த செந்தில் உடனடியாக நகர போலிசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த திருப்பத்தூர் நகர காவல் நிலைய போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மேலும் ஏற்கனவே இதுக்கு முன்பு இந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. அப்போது போலீசாருக்கு தகவல் கொடுத்து அது தொடர்பாக இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் மீண்டும் இது போன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது என கூறப்படுகிறது. மேலும் இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு 19 ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் எஸ் பி ஆல்பட் ஜான் வழங்கியுள்ளார். ஆனால் போலீசார் யாரும் ரோந்து பணியில் ஈடுபடுவதாக தெரியவில்லை. மேலும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News