வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

துறையூரில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்த மர்ம ஆசாமிகள் ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2024-06-18 03:01 GMT

போலீசார் விசாரணை 

திருச்சி மாவட்டம் துறையூர் சௌடாம்பிகா தெருவில் வசிப்பவர் முத்துவீரன்.இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.நேற்று அதிகாலை 5.40 மணியளவில் மாஸ்க் அணிந்துகொண்டு வந்த 5 நபர்கள் முத்து வீரனிடம் தாங்கள் வருமான வரி அதிகாரிகள் என்றும் தங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டனர்.

இதை நம்பிய முத்துவீரன் அவர்களை வீட்டில் உள்ள அனைத்து பீரோக்களையும் திறந்து சோதனை செய்வதற்கு அனுமதித்துள்ளார். மர்ம ஆசாமிகள் சோதனை செய்வது போல் நடித்து பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.5 லட்சம் மற்றும் 5 சவரன் நகையை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் முத்துவீரன் முறையிட்ட போது வந்தவர்கள் மர்ம ஆசாமிகள் என்றும் அவரிடம் ரொக்கத்தை கொள்ளையடிப்பதற்காக அதிகாரி போல் நடித்தும் தெரியவந்தது இதனை தொடர்ந்து முசிறி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்ய ப்பட்டது.மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News