ஆவடியில் மருத்துவரிடம் வழிப்பறி: இருவர் கைது
ஆவடியில் மருத்துவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-15 13:37 GMT
மருத்துவரிடம் வழிப்பறி செய்தவர்
ஆவடி, வசந்தம் நகரில் ஆயுர்வேத கிளினிக் நடத்தி வருபவர் நோபல், 35. இவர், நேற்று முன்தினம் இரவு, கிளினிக்கிற்கு வெளியே நின்றிருந்தார். அப்போது, மூன்று பேர் அவரை சரமாரியாக தாக்கி, 5,000 ரூபாய், கைகடிகாரம் ஆகியவற்றை பறித்து தப்பினர்.
இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், பழைய குற்றவாளியான வெள்ளவேடைச் சேர்ந்த ஆனந்த்ராஜ், 42, ராஜேஷ், 38, ஆகியோரை கைது செய்தனர்.