கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
ஆறுமுகநேரி அருகே கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் பரமன்குறிச்சி செல்லும் வழியில் உள்ள ராமசாமிபுரத்தைச் சோ்ந்த தங்கசாமி மகன் இளவரசன், 15 ஆண்டுகளாக ஆறுமுகனேரி காமராஜபுரத்தில் வசித்து வருகிறாா். வீட்டு முன் உதிரி பாகங்கள் கடை நடத்திவருவதுடன் பஞ்சா் ஒட்டும் வேலையும் செய்துவருகிறாா்.
இவர் த்கடை அருகே சிறிய கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார். செவ்வாய்க்கிழமை அதிகாலை பைக்கில் வந்த இருவா், கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து, பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர் .அதில், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடா்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஏற்கனவே ஆறுமுகனேரியில் கடந்த 22ஆம் தேதி பகலில், வீட்டில் தனியாக இருந்த காணியாளா் தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி சாந்தியை மா்ம நபா் கத்தியால் தாக்கி, 21 பவுன் நகைகள், பைக்கை கொள்ளையடித்துச் சென்றாா். இதுதொடா்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஏஐடியூசி காலனியில் உள்ள வீட்டில் அதிகாலையில் மாடி வீட்டுக்கான அழைப்பு மணியை மா்ம நபா்கள் அடித்துள்ளனா். மாடி வீட்டில் வசிப்பவா் எச்சரிக்கையாகி, கீழ் வீட்டிலுள்ள உரிமையாளரை கைப்பேசியில் அழைத்ததும், மா்ம நபா்கள் தப்பிசென்றுள்ளனர். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்