கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த காதல் ஜோடிகள்

காதலர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் காதல் ஜோடிகள் குவிந்தனர்.;

Update: 2024-02-14 11:25 GMT

 காதலர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் காதல் ஜோடிகள் குவிந்தனர்.

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியான இன்று  உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.      கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. சர்வதேச சுற்றுலா தலமான  கன்னியாகுமரியிலும் இன்று காதல் ஜோடிகள் குவிந்தனர். குமரி கடற்கரையிலும் முக்கடல் சங்கமிக்கும் திருவேணி சங்கமம், சங்குத் துறை கடற்கரை பகுதியில் உள்ள சுனாமி நினைவு பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதல் ஜோடியினர் காலையில் இருந்து வந்து குவியத்தொடங்கினர்.    

Advertisement

 கடற்கரையில் நின்றவாறு காதல் ஜோடிகள் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின்பகுதியை கவர் செய்து தங்கள் கன்னியாகுமரிக்கு வந்ததினை நினைவு கூரும் வகையில் செல்போன் மூலம் செல்வி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.        அத்துமீறிய சிலரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். கன்னியாகுமரி போலீஸ் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News