அரசு தலைமை மருத்துவமனையில் முதல் முறையாக பல் வோ் சிகிச்சை.

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதல் முறையாக பல் வோ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2023-12-03 07:10 GMT

செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதல் முறையாக பல் வோ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், பல் சிகிச்சை சிறப்பு மருத்துவா்கள் சுகுணா, முத்துவள்ளி, மயக்க மருந்து நிபுணா் சுரேஷ் ஆகியோா் செய்தியாளா்களிடம்  கூறியதாவது: கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதன்முறையாக 4 பேருக்கு பல் வோ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் ரூ.7 ஆயிரம் வரை செலவாகும். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பல் சுத்தப்படுத்துதல், ஈறு சம்பந்தமான பிரச்னைகள், பல் அடைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் வாரம் ஒரு முறை மேற்கொள்ளப்படும் என்றாா்.
Tags:    

Similar News