தொழில்நுட்ப நிறுவனத்தில் வட்டமேசை விவாதம்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வட்டமேசை விவாதம் நடைப்பெற்றது.
மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், இந்தியாவில் உயர்கல்வி, என்.இ.பி., அமலாக்க சூழலின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் வட்டமேசை விவாதம் நடந்தது. இந்திய கல்வி ஊக்குவிப்பு சங்கம் மற்றும்- எஸ்.ஆர்.எம்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. இந்த நிகழ்ச்சியை, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீத்தாராம் துவக்கி வைத்தார். தேசத்தை கட்டி எழுப்புவதில், பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு அதிக பங்கு உள்ளதாக, அப்போது அவர் பேசினார்.
எஸ்.ஆர்.எம்., கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைவேந்தர் சத்யநாராயணன் பேசியதாவது: அரசு கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றிய காலத்தில் இருந்து, நாட்டின் வளர்ச்சியில் தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், நாடு வெகு துாரம் முன்னேறி உள்ளது. தனியார் கல்வி நிறுவனத்தை துவங்குவது எளிதானது அல்ல. நாட்டின் உயர்கல்வி முன்னேற்றத்திற்கு, ஏ.ஐ.சி.டி.இ., போன்ற நிறுவனங்கள் உதவியாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.