ஐஜேகே நிர்வாகி வீட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் நடவடிக்கை
லால்குடி அருகே திருமங்கலத்தில் பறக்கும் படையினர் ஐஜேகே கட்சி நிர்வாகி வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் , 500 பாராளுமன்ற தொகுதி பணிகள் புத்தகங்கள், மற்றும் 100 விளம்பர நோட்டீஸ்களை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-17 04:11 GMT
பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலத்தில் தேர்தல் பறக்கும் படை அணியின் ஏ பிரிவின் அதிகாரி செழியன் தலைமையில் கொண்ட குழுவினர் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருமங்கலம் மாதா கோவில் தெருவில் உள்ள ஐ ஜே கே நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் சோதனை செய்த போது வீட்டின் கழிவறையில் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் பணம் பாராளுமன்ற தேர்தல் பணிகள் என்ற தலைப்பில் உள்ள 500 புத்தகங்கள், விளம்பர நோட்டீஸ் 100 ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.பின்னர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் லால்குடி வருவாய் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.இதனைத் தொடர்ந்து கைப்பற்றிய பணம் மற்றும் விளம்பர நோட்டீஸ் ஆகியவற்றை லால்குடி சார் நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.