தக்கலையில் பைக் ஓட்டிய கல்லூரி மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தக்கலையில் பைக் ஓட்டிய கல்லூரி மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2024-02-02 12:28 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பேச்சுமுத்து பாண்டியன் தலைமையிலான போலீசார் பிரம்மபுரம் பகுதியில் நேற்று மாலையில்  வாகன சோதனையில் ஈடுபட்டனர்.    

 அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் போதையில் பைக்கில் வேகமாக வருவதைக் கண்டு பைக்கை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த வாலிபர் போலீசை கண்டதும்  பைக்கை திருப்பி வேறு வழியில் தப்பி செல்ல முயன்றார்       ஆனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். 

விசாரணையில் அவர் மயிலோடு பகுதியை சேர்ந்த சர்ஜன் (23) என்பதும், இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருவதாகவும், கல்லூரி முடித்து வரும்போது மது அருந்தி வந்ததும் தெரிய வந்தது.    

  இதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பைக்கை  பறிமுதல் செய்து சர்ஜனை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News