ரூ. 28 லட்சம் மதிப்பு : வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
ரூ. 28 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 09:46 GMT
திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை விமானம் மூலம் வெளிநாடு செல்ல இருந்த 4 பயணிகளிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவா்களிடம் ரூ.28.11 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால், குவைத் தினாா் பணத்தாள்கள் இருந்தது தெரியவந்தது.
உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல முயன்ற அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்