ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல் - வடமாநில வாலிபர் கைது

பெங்களூருவிலில் இருந்து சரக்கு வேனில் குட்கா பொருட்களை கடத்தி வந்த வட மாநில வாலிபரை கைது செய்து ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்காவை சேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-12-29 04:04 GMT

சஞ்சய் குமார்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு சரக்கு வேனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக நேற்று இரவு 9 மணி அளவில் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இந்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் பண்ணப்பட்டி பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த புத்தம் புதிய சரக்கு வேனை மடக்கி சோதனை செய்ததில் அதில் 515 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய சரக்கு வேன் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பிலான 515 கிலோ ஹான்ஸ் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு வேனை ஓட்டி வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சஞ்சய் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News