நள்ளிரவில் போதை பொருட்கள் கடத்தல் - மடக்கி பிடித்த தேர்தல் பறக்கும்படை
கெங்கவல்லியில் நேற்று நள்ளிரவில் காரில் கடத்திய ரூ.50 லட்சம் மதிபிளான குட்கா பொருட்களை, தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றி, வீரகனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி நாடாளமன்றத் தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் நேற்றிரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கெங்கவல்லி பிரிவு சாலை பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த கார் நிற்காமல் வீரகனூர் சாலையில் மின்னல் வேகத்தில் சென்றது. இதுகுறித்து அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த கூட்டுறவு சார் பதிவாளர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சுதாரித்துக்கொண்டு வீரகனூர் பஸ் ஸ்டாண்ட பகுதியில் அந்த காரை மடக்கினர்.
ஆனால், அங்குநிற்காமல் சென்றதால் பறக்கும்படையினர் துரத்திச் சென்றனர் இதனால், வீரகனூர் -பெரம்பலூர் நெடுஞ்சாலையில் வடிவுச்சி அம்மன் கோயில் எதிரில் உள்ள மேடான பகுதியில் காரை விட்டு விட்டு அதில் வந்தவர்கள் தப்பினர்.தொடர்ந்து அத்த அசரில் சோதனையிட்ட தில் 50 மூட்டைகள் இருந் தது. அவற்றை பிரித்து பார்த்ததில் ஹான்ஸ்,குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது.
அவற்றின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும். இதுகுறித்து உதவித் தேர் தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது அறிவுரைப்படி. வீரகனூர் காவல் நிலையத் தகவல் அளிக்கப்பட் டது. இதன்பேரில், எஸ்ஐ கார்த்திக் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று போதை பொருட் களுடன் காரை கைப்பற் றினர். தொடர்ந்து காரில் வந்தவர்கள் யார்? எங்கிருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது. எங்கு கடத்திச் செல்லப் பட்டது என்பது குறித்து, தீவிர விசாரணை வருகின்றனர் செங்கவல்லி யில் நேற்று நள்ளிரவு நடை பெற்ற இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.