மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மயிலாடுதுறையில் அரசியல் கட்சி பேனர்களை அப்புறப்படுத்தி, சுவரில் எழுதப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்களை நகராட்சி நிர்வாகம் அழித்து வருகிறது. மயிலாடுதுறை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வருவாய் துறையினரால் பூட்டி சீல் வைக்கப்பட்டது;

Update: 2024-03-17 04:19 GMT

எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சீல் 

இந்திய தேர்தல் ஆணையத்தால்  அதிகாரப்பூர்வமாக தேர்தல் தேதி அறிவிக்கபட்ட உடனே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், தொகுதி அலுவலகங்கள் வருவாய்த்துறையினரால் பூட்டி சீல் வைக்கப்பட்டன. மயிலாடுதுறை நகரில் அரசு அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருந்த அனைத்து கட்சி போஸ்டர்களையும் நகராட்சி நிர்வாகம் கிழித்து அப்புறப்படுத்தி வருகின்றது. தொடர்ந்து நகரில் அரசியல் சார்ந்த பேனர்கள் கட்டவுட்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன. நகராட்சி வாகனத்தில் கிழிக்கப்பட்ட போஸ்டர்களையும் பேனர்களையும் கட்டவுட்டுகளையும் எடுத்துச் சென்றனர்.
Tags:    

Similar News