ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள்: ஆணையர் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2024-04-23 10:57 GMT

ஆலோசனையில் ஈடுபட்ட அதிகாரிகள் 

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி, தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி முன்னிலையில் இன்று தடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதல்முறையாக அவர் வருகை தந்துள்ள நிலையில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவியிடங்கள் குறித்தும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ள தேர்தல் பொருட்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பெர்பச்சுவல் பா.ரொஸிட்டா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மல்லிகா, அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News