குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு; வீடுகள் சேதம்

நாகர்கோவிலில் பெய்த மழையால் இலந்தையடி அரசு தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதுபோல் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் 6 வீடுகள் சேதம் அடைந்தன.

Update: 2024-05-18 07:01 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தென் மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும்  என்று வானிலை மையம் அறிவித்தது. இந்த நிலையில் குமரி மாவட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.       அருமனை அருகே மலையோர பகுதிகளில் மாலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன.  அவற்றை பொதுமக்கள் வெட்டி  அப்புறப்படுத்தினர்.    

  இதுபோன்று பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,  அணைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் அணைகளில் நீர் மட்டம் உயந்துள்ளது.  தொடர்  மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டிய நிலையில், இன்று சற்று தணிந்து காணப்பட்டது இந்த நிலையில் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அருவி ஓரத்தில் அனுமதிக்கப்பட்டனர்.    

   நாகர்கோவில் பகுதியில் பெய்த மழையால் இலந்தையடி அரசு தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதுபோல் மாவட்டத்தில்  கடந்த ஐந்து நாட்களில் 6வீடுகள் சேதம் அடைந்தன. 11 மரங்கள் சாய்ந்துள்ளன. ஒரு மின்கம்பம் பகுதி அளவு சேதம் அடைந்தது.

Tags:    

Similar News