சாலையை கடக்க முயன்ற கடமான் பலி
வடகாடு எல்லை அருகே சாலையை கடக்க முயன்ற சுமார் 2 வயது மதிக்கத்தக்க கடமான் மீது டூ வீலரில் மோதியது.
Update: 2024-05-18 06:57 GMT
ஒட்டன்சத்திரம் கண்ணனூரை சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (23). இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வடகாடு எல்லை கருப்புசாமி கோயில் அருகே சென்ற போது சாலையை கடக்க முயன்ற சுமார் 2 வயது மதிக்கத்தக்க கடமான் மீது மகுடீஸ்வரனின் டூவீலர் மோதியது.இதில் படுகாயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதில் படுகாயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் இந்த விபத்தில் மகுடீஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்ததும் ஒட்டன்சத்திரம் வனச்சரகர் ராஜா, கால்நடை மருத்துவர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் மானின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டது.