பாளையங்கோட்டையில் அணிவகுத்து நின்ற சப்பரங்கள்

Update: 2023-10-24 09:54 GMT

சப்பர தேர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஆயிரத்து அம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா 10 நாட்கள் கொடியேற்றத்துடன் தொடங்கி, விஜயதசமி மறுதினம் மகிசாசுர சம்ஹாரமும் நடைபெறும்.இதற்காக பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் திருக்கோவிலில் இருந்து அம்பாள் சிம்ம வாகனத்தில் விஜயதசமி திருநாளான இன்று மகிஷாசுர மர்தினி அலங்காரத்தில் மின்னொளி அலங்காரத்தில் அமைக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்று பாளையங்கோட்டையில் அமைந்திருக்கும் முக்கிய திடல்களில் ஒருசேர அனைத்து சப்பரங்களும் நின்று அணிவகுப்பு நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து நாளை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள எருமை கடா மைதானத்தில் மஹிசா சுர சம்ஹாரம் நடைபெறும். இதற்காக நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பேராத்து செல்வி அம்மன் திருக்கோவிலில் இருந்து அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோல் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள முத்தாரம்மன் திருக்கோவில் அம்பாளும் மகிசாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.மேளதாளம் முழங்க இரண்டு சக்கரங்களும் ஒரு சேர வண்ணாரப்பேட்டை நகர் பகுதிகளில் வளம் வந்த நிலையில் திரளான பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்தனர்.

இரண்டு அம்மன் சப்பரங்களும் வண்ணாரப்பேட்டை நகர் பகுதியில் வீதி உலாவை நிறைவு செய்த பின்னர் பேராத்து செல்வி அம்மன் பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 36 அம்மன் கோவில்களில் இருந்தும் அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று நெல்லையப்பர் கோவில் முன்பு 36 சப்ரங்களும் ஒன்று போல் நின்று சக்தி தரிசன நிகழ்வு நடைபெறுகிறது.


Tags:    

Similar News