சாய் பாபா ஜெயந்தி மற்றும் ராமர் ஜெயந்தி சிறப்பு பூஜை

கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் சாய்பாபா ஜெயந்தி மற்றும் ராமர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-04-18 00:46 GMT

கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் சாய்பாபா ஜெயந்தி மற்றும் ராமர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி பாபாவின் ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீராம நவமி விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி பாபாவின் ஜெயந்தி மற்றும் ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை 5.30 மணிக்கு காலை ஆரத்தியும், 6.15 மணிக்கு மங்கள ஸ்நானம் அபிஷேகமும், 8.15 நைவேத்தியம் மற்றும் ஆரத்தியும், 8.45 மணிக்கு சாவடி பாபா பூஜையும், 9 மணிக்கு துவாரகாமாயி பாபா‌ பூஜையும் நடைபெற்றது. 10 மணிக்கு செல்வி அஷ்மிதாவின் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 11.30 மணிக்கு மதிய ஆரத்தி, நைவேத்தியம், திருமணம் மற்றும் குழுமத்தைப்பேறு வேண்டி‌ கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. 12.30 மணிக்கு சாயி நாம் ஜெபம் மற்றும் பஜனும், மாலை 5.15 மணிக்கு நைவேத்தியம் மற்றும் ஆரத்தியும், இரவு 6.15 மணிக்கு மாவிளக்கு பூஜையும், 7 மணிக்கு இரவு ஆரத்தியும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை முதல் இரவு வரை அண்ணதானம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டிப்பட்டி சாய் தபோவன அறங்காவலர் குழுவினர் மற்றும் சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News