8 ரூபாய்க்கு கத்தரிக்காய் விற்பனை- விவசாயிகள் கவலை

தென்காசி சந்தையில் கத்தரிக்காய் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து காணப்படுகிறது.

Update: 2024-02-03 07:38 GMT
8 ரூபாய்க்கு கத்தரிக்காய் தென்காசி விவசாயிகள் கவலை

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம், ஆலங்குளம் கடையம், ஆவுடையானூர் கீழப்பாவூர், சுரண்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகள்பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்வார்கள். தற்பொழுது சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக விவசாயிகள் கத்தரிக்காய் பயிரிட்டுள்ளதால் மார்க்கெட்டுக்கு கத்தரிக்காய் வரத்து அதிகமாக உள்ளது.

கிலோஇருபது ரூபாய் வரை விற்ற கத்திரிக்காய் தற்போது 8 முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.பிப்ரவரி 3ஆம் தேதி தென்காசி உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியலின்படி கத்தரிக்காய் 30 ரூபாய்க்கு, தக்காளி 36 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 30 ரூபாய்க்கு, பெரிய வெங்காயம் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகளின் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   

Tags:    

Similar News