சட்டவிரோத புகையிலை விற்பனை - இருவர் கைது

திண்டுக்கல் நல்லாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2023-12-31 01:26 GMT

புகையிலை விற்ற இருவர் கைது

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்லாம்பட்டி பகுதியில் சிலர் புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்வதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி,சிறப்பு சார்பு ஆய்வாளர் சேகர் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த தெற்கு தெருவை சேர்ந்த செந்தில் (வயது 43), கிழக்குத் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (53) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News