புதுக்கோட்டையில் களைகட்டிய கரும்பு மஞ்சள் கொத்து விற்பனை!

புதுக்கோட்டையில் கரும்பு மஞ்சள் கொத்து விற்பனை களைகட்டியது.

Update: 2024-01-14 15:55 GMT

கரும்பு விற்பனை

புதுக்கோட்டை நகரில் சாந்தநாத சுவாமி கோயில் அருகேயும், திலகர்திடல் பகுதியிலும் கரும்புகளும், மஞ்சள் கொத்துக்களும் விற்பனைக்காக இறக்கப்பட்டுள்ளன. மஞ்சள் கொத்து ஜோடி ரூ. 30 முதல் 50 வரையிலும் விற்கப்படுகிறது.

மழையூர், வம்பன் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 10 கரும்புகளைக் கொண்ட கொத்து ரூ. 300-க்கு விற்கப்படுகிறது. கடந்தாண்டு ரூ. 600 முதல் 650 வரை ஒரு கட்டு கரும்பு விற்றது. ஆனால், நிகழாண்டில் விலை சரிபாதி அளவுக்குச் சரிந்துள்ளது. இதுகுறித்து விற்பனையாளர் கொத்தவடையைச் சுப்பையா கூறியது கரும்பு வம்பன் பகுதியில் இருந்துதான் கரும்புகளை இறக்கியிருக்கிறோம்.

நகரில் 5 இடங்களில் எங்கள் கரும்புகள் விற்பனைக்கு உள்ளன. கடந்தாண்டு இதைவிட இரு மடங்கு விலை இருந்தது. ஆனால், இப்போது விளைச்சல் அதிகரித்திருப்பதால், கரும்பின் விற்பனை விலை சரிபாதியாகக் குறைந்திருக்கிறது.

மக்களிடம் வாங்கும் ஆர்வமும் குறைந்திருப்பதாகவே தெரிகிறது. விற்பனை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Tags:    

Similar News