அம்மாபேட்டை சுப்பிரமணியர் கோவிலில் அறுபத்து மூவர் திருவீதி உலா
Update: 2023-12-04 04:46 GMT
சேலம் அம்மாபேட்டை குமரகுரு சுப்ரமணிய கோவில் திருமுறை மன்ற அறக்கட்டளை சார்பில் அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. காலை ஏழு மணிக்கு மேல் மூலவர்களான விநாயகர், வள்ளி, தெய்வானை சுப்பிரமணியர், சொக்கநாதர், அம்பாள் ஆகிய திருமேணிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து பொள்ளப்பிள்ளையார், அம்மையப்பர், சேயிடைச்செல்வர் 63 நாயன்மார்கள், தொகை அடியார்கள் இன்பமாணிக்கவாசகர், தெய்வ சேக்கிழார் ஆகிய உற்சவ திருமேணிகளுக்கு பால் உள்பட பதினாறு வகை பொருட்களால் அபிஷேகம் செய்து பூஜை நடைபெற்றது. இதையடுத்து சென்னை தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்ற தலைவர் கையிலை மணி, ஒலியரசு, பவானி, சிவனடியார் திருக் கூட்டத் தலைவர் தியாகராஜன் சொற்பொழிவு நடந்தது. மதியம் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார்,63 நாயன்மார்கள் பேரொளி வழிபாடு நடந்தது. தொடர்ந்து அன்னம் பாலிப்பு செய்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 63 நாயன்மார்கள் உற்சவ திருமேனிகள் சர்வ அலங்காரத்துடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது.