மாநில வூசூ போட்டியில் சேலம் வீரர், வீராங்கனைகள் சாதனை

மாநில வூசூ போட்டியில் சேலம் வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Update: 2024-06-29 11:41 GMT

சாதனை படைத்த வீரர்கள்

மாநில அளவிலான வூசூ போட்டி திண்டிவனத்தில் நடந்தது. இதில் ஜூனியர், சீனியர் பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் செயல்விளக்க பிரிவில் தமன் 2 வெள்ளி, ஒரு வெண்கலம், தர்ஷன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி,

கார்முகிலன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, நிகில் 2 தங்கம், ஒரு வெள்ளி, மவுலி 3 வெண்கலம், நிக்‌ஷதா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, தரண் 2 தங்கம், ஆதிரை 2 தங்கம், ஹாகினி 2 தங்கம், மொகித் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், கோகிலா ஒரு தங்கம், ஒரு வெண்கலம்,

தர்னிதா ஒரு வெள்ளி, நவீன்காந்த் ஒரு தங்கம், ஒரு வெள்ளியும், சண்டை பிரிவில் மிருதுளா ஒரு வெண்கலம், அபுல்கலாம் ஒரு வெண்கலம், ரிபாஷ்கான், ஸ்ரீஹரி, பிரித்வி, சித்தேஷ்வரன் ஆகியோர் தலா ஒரு வெள்ளி, வடிவேல் ஒரு தங்கம், தாமோதரன் 3 தங்கம், துலின் ஒரு தங்கம் மற்றும் குழு போட்டிகிளில் 3 தங்கம்,

ஒரு வெள்ளி என மொத்தம் 17 தங்கம், 25 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை மாணவ- மாணவிகளை சேலம் மாவட்ட வூசூ சங்க தலைவர் நாராயணன், சங்க மாவட்ட செயலாளரும், தலைமை பயிற்சியாளருமான கோபி, பள்ளி துணை பயிற்சியாளர் முருகன், ரபீக், செல்வம் உள்பட பலர் வாழ்த்தினர்.

இந்த மாணவ- மாணவிகள் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய போட்டிக்கு தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News