சேலம் : வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள நிலையில் சேலம் புறநகர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இயக்கப்படும் 600 பஸ்களும் வழக்கம் போல இயக்கப்பட்டன. பஸ் நிலையங்கள், டெப்போக்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-09 14:45 GMT

பேருந்துகள் இயக்கம் 

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் காலி பணியிடங்கனை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கிடையே அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கிடையே நேற்று சென்னையில் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

இந்த போராட்டத்தில் இருந்து தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்பட சில சங்கங்கள் விலகுவதாக அறிவித்தன. ஆனாலும் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. பாட்டாளி தொழிற்சங்கம், தே.மு.தி.க. தொழிற்சங்கம் உள்பட பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து பஸ்களை வழக்கம் போல இயக்க போக்குவரத்து கழக போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல இயக்கப்படுகிறது. இதே போல சேலம் புறநகர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இயக்கப்படும் 600 பஸ்களும் வழக்கம் போல இயக்கப்படுகிறது. இதையொட்டி பஸ் நிலையங்கள், டெப்போக்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பஸ்கள் இயங்காது என்று கூறப்பட்டதால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது. ஆனாலும் குறைந்த பயணிகளுடன் பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதையொட்டி பஸ் நிலையங்கள், டெப்போக்கள் முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News