சேலம் அரசு கலைக்கல்லூரியில் ரூ.1.80 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள்

அரசு கல்லூரிக்கான கட்டுமான பணியை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-26 17:57 GMT

அரசு கல்லூரி கட்டுமான பணி

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று 2 தளங்களில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்ட பெருந்தலைவர் காமராஜர் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று காலை நடந்தது. இவ்விழாவில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதனால் கல்லூரி மாணவ-மாணவிகளும் , ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். விழாவில் பகுதி செயலாளர் சாந்தமூர்த்தி, கல்லூரி முதல்வர் செண்பகவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News