சேலம் : மாணவரிடம் மடிக்கணினி திருட்டு
சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் கல்லூரி மாணவரிடம் மடிக்கணினி திருடியவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Update: 2023-12-28 02:53 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் கோகுல்கண்ணன் (23). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். கோகுல்கண்ணன் சம்பவத்தன்று சென்னைக்கு செல்வதற்காக சேலம் புதிய பஸ் நிலையம் வந்தார். அப்போது அவரிடம் இருந்த மடிக்கணினி மற்றும் ரூ.200 ஆகியவற்றை மர்ம நபர்கள் நைசாக திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.