சேலத்தில் 3வது நாளாக இன்றும் கன மழை
சேலத்தில் 3வது நாளாக இன்றும் கன மழை பெய்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-13 12:19 GMT
சேலத்தில் பெய்த கனமழை
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் வெளியில் செல்லவே முடியாத வகையில் சாலையில் வெப்பம் அனலாக கொதித்தது. இதனால் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தால் அவதிப்பட்டனர்.
இன்று காலை முதல் மதியம் வரை பலத்த வெயில் அடித்தது. மதியம் திடீரென கனமழை பெய்தது. இதனால் சேலத்தில் குளிர் காற்று வீசியதுடன் இதமான சூழல் நிலவியது. இன்று மதியம் பெய்த மழையால் முள்ளுவாடி கேட், அண்ணா பூங்கா, புதிய, பழைய பஸ் நிலையங்கள், 4 ரோடு உள்ளிட்ட மாநகரின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பல சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சென்றவர்கள் பெரும் அவதிப்பட்டனர்.