கொண்டலாம்பட்டியில் சேலம் தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகம்
கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் சேலம் தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகமாக செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்தார்.
Update: 2024-03-21 05:56 GMT
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சம்பந்தப்பட்ட தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விவரங்கள், தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலரான சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.