சிறந்த கராத்தே வீரராக சேலம் மாணவன் தேர்வு - ஆளுநர் பாராட்டு
Update: 2023-12-19 04:59 GMT
தர்சனுக்கு விருது வழங்கிய தமிழிசை சவுந்தரராஜன்
உலக கராத்தே மாஸ்டர்ஸ் சங்கத்தின் சார்பில் இந்திய அளவில் சிறந்த கராத்தே வீரர்களுக்கான மாணவர் தேர்வு சென்னையில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து எஸ்.தர்ஷன் கலந்து கொண்டான். இந்த மாணவன் இந்திய அளவில் சிறந்த கராத்தே வீரராக தேர்வு பெற்றுள்ளார். அவருக்கு புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டி விருது வழங்கினார். சிறந்த கராத்தே வீரராக தேர்வாகி சேலம் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ள மாணவன் எஸ்.தர்ஷனை, பயிற்சியாளர் சரவணன், பெற்றோர்கள் உள்பட பலர் பாராட்டினர். சாதனை மாணவன் எஸ்.தர்ஷன், அழகாபுரம் செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.