சேலம் : சொர்ணாம்பிகை தாயாருக்கு வளையல் சாத்துப்படி

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சொர்ணாம்பிகை தாயாருக்கு வளையல் சாத்துப்படி நிகழ்வில் பக்தர்களுக்கு 18000 வளையல்கள் வழங்கப்பட்டன.

Update: 2024-02-10 08:42 GMT

வளையல் சாத்துபடி

சேலத்தில் உள்ள சுகவனேசுவரர் சொர்ணாம்பிகை கோவிலில் தை மாதம் கடைசி வெள்ளியையொட்டி சொர்ணாம்பிகை அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சொர்ணாம்பிகை தாயாருக்கு பட்டாடை உடுத்தி தங்க கவச சாத்துப்படி நடைபெற்றது.

பின்னர் பல்வேறு விதமான மலர்களால் அம்மனுக்கு மாலைகள் சாத்தப்பட்டன. இதனையடுத்து சுமார் 18,000 வளையல்களால் சாத்துப்படி வைபவம் நடைபெற்றது. பின்னர் லட்சார்ச்சனை நடைபெற்று மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்பட்ட 18000 வளையல்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News